Skip to main content

சிங்கள பாடகிக்கு எதிராக சிலிர்க்காத தமிழ்ச் சினிமா! கொந்தளிக்கும் ஈழம்! 

 

Tamil cinema not thrilled against Sinhala singer! Turbulent Eelam!

 

இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் நடிக்கிறார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன். இந்தப் படத்தில் கீர்த்தி திவாரி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், சீனியர் நடிகர்கள் பிரபு, நாசர் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்கின்றனர். 

 

இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களில், மதன் கார்க்கி எழுதிய ஒரு பாடலை இலங்கையைச் சேர்ந்த பாப் இசை பாடகி யோஹானியை அழைத்து வந்து பாட வைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இதுதொடர்பான புகைப்படமும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தால் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் கொந்தளிக்கிறார்கள்.

 

பாப் இசை பாடகி யோஹானி, இலங்கை அரசின் சிங்கள ராணுவ தளபதிகளில் ஒருவரான பிரசன்ன டி சில்வாவின் மகள் ஆவார். ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தத்தில் தமிழர்களைக் கொன்று குவித்ததில் பிரசன்ன டி சில்வாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. சிங்கள இனவெறி அதிகம் இருக்கும் அதிகாரிகளில் சில்வாவும் ஒருவர். 

 

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய சில்வா, அதிபர் கோத்தபயாவிற்கு நெருக்கமாக இருந்து இனப்படுகொலைகளை அரங்கேற்றியவர். 

 

இவரைப் போலவே அவரது மகள் யோஹானியும் சிங்கள இனவெறி அதிகமுள்ளவர். சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது நடத்திய யுத்தத்தைப் புகழ்ந்து பாடியவர் யோஹானி. அப்படிப்பட்ட அந்தப் பாடகியை தமிழ்ச் சினிமாவில் பாட வைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் கொச்சைப்படுத்தும் செயல் என்று ஈழத்தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகியிருக்கிறது. 

 

தமிழ்ச் சினிமாவிலும் தமிழ்த் தேசியவாதிகளிடமிருந்தும், இதுகுறித்து எந்த எதிர்ப்பும் வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறது ஈழத் தமிழினம்!

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !