அதிமுக, பாஜகவை கலாய்த்த பிரபல இயக்குனர்!

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ள படம் கூர்கா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் சித்தார்த், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் பேசும் போது, இன்று காலை அனைத்து செய்திதாள்களிலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தது தான் தலைப்புச் செய்தியாக வந்தது.

director

அதற்கு கீழேயே தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டம் என்ற செய்தி இருந்தது. அந்தச் செய்தியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்கிறார் என்பதும் இருந்தது. இவர்கள் எல்லாம் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவர்கள்" எனக் கூறி கிண்டலடித்தார்.கடந்த 5 ஆண்டுகளாக சௌகிதார்கள் நம்மை மகிழ்வித்துக் கொண்டே இருந்தார்கள். அதே போல் இந்த 'கூர்கா'வும் நம்மை மகிழ்விப்பார். இன்னுமொரு 5 ஆண்டுகள் சவுக்கிதார்கள் நம்மை மகிழ்விக்கப் போகிறார்கள்.

admk director politics tamilcinema
இதையும் படியுங்கள்
Subscribe