Advertisment

தமிழ் வேண்டாம், உருதுவே வேண்டும்;மாணவர்கள் போராட்டம்

பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திற்கு முக்கியத்துவும் அளிக்கும் வகையில் 2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்று பிறப்பித்து அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டம் ஆண்டுதோறம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment

t

இதை எதிர்த்து மொழி சிறுபான்மை பள்ளிகளில் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளித்து 2016ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விருப்பமுள்ளவர்கள் தமிழிலும் மற்றவர்கள் அவரவர் தாய் மொழியிலே மொழி பாடத்துக்கான தேர்வு எழுதலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து வரும் 14ம் தேதி 10ம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் மஜ்ஹருள் உலூம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகம் முன் மார்ச் 9 ந்தேதி திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 200 க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நின்றவர்கள், தங்களுடைய தாய்மொழியான உருது மொழியில் பொதுத்தேர்வு எழுதவும், தமிழ் மொழித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

t

தகவல் அறிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சம்பவ இடத்திக்கு வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தேர்வு நேரத்தில் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், இதுப்போன்ற போராட்டங்கள் உங்களை திசை திருப்பிவிடும். அதனால் போராட்டத்தை கைவிட்டு களைந்து செல்லுங்கள், கல்வித்துறையின் உயர் அதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கையை கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையில் போலிஸார் போராட்டம் நடந்த இடத்தில் குவிந்திருந்தனர். இதனால் 3 மணி நேரம் வாணியம்பாடி பதட்டமாக இருந்து பின் இயல்பு நிலைக்கு திரும்பியது.

ambur chennai highcourt tamil
இதையும் படியுங்கள்
Subscribe