Advertisment

தமிழர்களின் விழாக்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும்- திருச்சி சிவா

trichy

புதுக்கோட்டை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி பா.வெங்கடேசன் மகள் காதணி விழா அறந்தாங்கியில் நடந்தது. விழாவில் திருச்சி சிவா எம்பி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் திருச்சி சிவா எம்.பி பேசும் போது..

Advertisment

தமிழர்கள் செய்யும் அத்தனை விழாக்களும் அறிவியல் ரீதியாக அர்த்தமுள்ள விழாக்களாகத் தான் இருக்கும். முடி வெட்டும் போது கைகளால் தலையை கசக்கி விடுவதால் தலையில் உள்ள நரம்புகள் தூண்டப்படுகிறது. அதே போல விரல்களில் நெட்டி முறிக்கும் போது கைகளின் சோர்வுகள் நீங்கி விரல்கள் புத்துணர்வு ஏற்படுகிறது.

Advertisment

நரம்புகளை கண்டறிந்து சிறு சிறு ஊசிகளை குத்தி எடுக்கும் போது உடலில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு செயல்பாடுகள் அதிகரிக்கிறது. அப்படித் தான் காதணி விழாவும்.

காதில் மெல்லிய நரம்புகள் தூண்டப்பட வேண்டும் அப்போது தான் புத்துணர்வு ஏற்படும் என்பதால் தான் காதணியை விழாவாக நடத்தி காதில் ஓட்டை போடுகிறார்கள். இதை நாம் விழாவாக செய்கிறோம். ஆனால் வெளிநாடுகளில் பணம் வாங்கிக் கொண்டு மருத்துவம் என்று செய்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன் தமிழர்களின் விழாக்கள் அர்த்தமுள்ள விழாக்களாக இருக்கும் என்று.

திராவிடமுன்னேற்றக் கழம் ஆட்சிக்காக ம்டும் மக்கள் முன் வரும் கட்சி அல்ல ஆட்சியே இல்லை என்ற போதும் மக்களுக்காக போராடி உரிமைகளை பெற்றுத் தரும் கட்சியாக உள்ளது. இது போல வேறு எந்த கட்சியும் செயல்பட முடியாது என்றார்.

trichy siva
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe