Advertisment

பாரம்பரிய கண்காட்சியில் தமிழ் புறக்கணிப்பை கண்டித்து முற்றுகை!

பாரம்பரிய கண்காட்சியில் தமிழ்
புறக்கணிப்பை கண்டித்து முற்றுகை!



புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் இந்திய அளவிலான பாரம்பரிய உணவு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி அரங்கில் மாநில மொழியான தமிழை புறந்தள்ளி விட்டு இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் பெயர் பதாகைகள் எழுதிவைத்துள்ளனர்.

இவ்வாறு வெளிப்படையாக இந்தி மொழித் திணிப்பதையும், தமிழ் மொழி அழிப்பு செய்வதையும் தமிழ் அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. தமிழர், தமிழ் மொழிக்கு எதிரான இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழ் அமைப்புகள் கண்காட்சி திடலை முற்றுகையிட்டு போராட்டம் செய்தன.

தமிழர் களம் தலைமையில் தமிழர் தேசிய இயக்கம், மக்கள் வாழ்வுரிமை இயக்கம், மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து கண்காட்சி திடலிலிருந்த இந்தி பாதாகைகளை கிழித்து போராட்டம் நடத்தினர்.

அதையடுத்து இன்று மாலைக்குள் அனைத்து இந்தி எழுத்துகளையும் அகற்றிவிட்டு, தமிழில் பதாகைகள் வைப்பதாக கண்காட்சி ஏற்ப்பாட்டாளர்கள் உறுதியளித்தனர். அதே சமையம் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

- சுந்தரபாண்டியன்

Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe