கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடைபெற்றது. அதனையடுத்துபிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மாமல்லபுரம் பயணம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார். அதில் மாமல்லபுரத்தின் அழகிய கரையில் இருந்த போது நான் எழுதிய கவிதை, தமிழில் மொழி பெயர்ப்பு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கவிதையில் " அலைகடலே அடியேனின் வணக்கம்" என்ற வரியுடன் தொடங்குகிறது.
இந்நிலையில் தமிழ் மிகவும் அழகானது தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என மோடி தெரிவித்துள்ளார். சிறந்த கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ் மொழியில் எனது எண்ணங்களை வெளிப்படுத்தியதுமகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் டுவிட்களுக்குநன்றி தெரிவித்து பிரதமர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.