Advertisment

நித்தியானந்தா நாட்டின் பிரதமர் ஒரு தமிழ் நடிகையா? அதிர வைக்கும் தகவல்!

தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை நித்தியானந்தா விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும், தற்போது அவருடன் இரண்டு பெண் சீடர்களும், குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தன ஷர்மாவின் மூத்த மகளும், 30 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கென்று தனி 'வெப்சைட்' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க நித்தியானந்தா திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். மேலும் அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என அந்த நாட்டு அரசு உதவியுடன் இதெல்லாம் செய்ய போவதாக கூறுகின்றனர். இந்த தீவு வாங்கும் அளவுக்கு நித்தியானந்தாவிற்கு பணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த பணம் எல்லாம் உலகம் முழுவதும் இருக்கும் நித்தியானந்தா பக்தர்களிடம் நிதியாக பெற்ற பணம் என்று கூறிவருகின்றனர்.

Advertisment

nithy

மேலும் எத்தனை கோடிக்கு இந்த தீவை வாங்கினார் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவராமல் ரகசியமாக உள்ளது. மேலும் இந்த நாட்டில் குடிமகனாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் குடிமகனாகவும் அதற்கு இந்து என்ற ஒரு தகுதி மட்டுமே போதும் என்று அறிவித்து இருந்ததாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் நித்யானந்தா உருவாக்கும் புதிய நாட்டின் பிரதமராக ஒரு தமிழ் நடிகையை அவர் நியமனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. நித்தியானந்தாவின் பக்தர்கள் அம்மா என்று அழைக்கும் அந்த நடிகை தான் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்பு ஏற்பதாகவும் இந்நாட்டிற்கு அதிகாரம் மற்றும் உரிமை பெற இந்நாட்டை ஐநாவில் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தற்போது தயாரித்து தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸ் தரப்போ நித்தியானந்தா எந்த நாட்டிற்கும் செல்லவில்லை. அவர் இந்தியாவில் தான் இருக்கிறார். அதோடு அவர் வெளியிட்ட வீடியோக்கள் எல்லாம் இமயமலை பகுதிகளில் எடுத்தது என்றும் போலீஸ் தரப்பு கூறிவருகின்றனர். மேலும் விரைவில் நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என்றும் கூறுகின்றனர்.

minister island Actress tamil nithyananda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe