/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/38_9.jpg)
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். மேலும், இதற்காகச் செலுத்தப்படும் நிதி அனைத்தும் கரோனா நிவாரணத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும், அதன் கணக்குவழக்குகள் வெளிப்படைத் தன்மையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சிவக்குமார் கரோனா நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை தமிழக அரசிற்கு வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இந்த ஒரு கோடி ரூபாய் நிதியை அளித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)