Skip to main content

கட்டுப்பாட்டை இழந்த பஸ்; மரத்தடியில் ஒதுங்கிய காவலருக்கு நேர்ந்த துயரம்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

tambaram maduravoyal bypass police and government bus incident 

 

தாம்பரத்தில் போலீஸ் ஒருவர் மீது பேருந்து மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 29). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து பணிக்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வழியில் மழை பெய்ததால் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தடியில் மழைக்கு ஒதுக்கியுள்ளார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி இருந்த  நாகராஜன் மீது மோதி அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது.

 

இதில் படுகாயம் அடைந்த காவலர் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானர். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் காளிதாஸ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மழைக்காக சாலை ஓரத்தில் ஒதுங்கி நின்றவர் மீது பேருந்து மோதி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்திலும், காவல்துறையினர் மத்திலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பேக்கரியில் 305 கிலோ குட்கா' -போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
 '305 kg gutka in the bakery' - police action

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜாவகர் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைப்போல் கடைகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு சத்தி ரோட்டில், சி.என்.சி. கல்லூரி எதிரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார்  கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பேக்கரி ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான்மசாலா, குட்கா, புகையிலை  ஆகியவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு மேற்கொண்ட சோதனையில் ரூ. 3 லட்சத்து 3 ஆயிரத்து 480 மதிப்பிலான பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 305 கிலோ புகையிலை - குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, பவானி மெயின் ரோடு, அசோகபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்த பாலச்சந்தர் (37) மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story

'நான் ஆர்ப்பாட்டத்துக்கே வரலங்க; விட்ருங்க' - கதறிய முதியவர்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
'I am not concerned about the demonstration; -the wailing old man

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்தும். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும், உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய கோரியும் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட வந்த பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரை வேட்டியுடன் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய அழைத்தபோது, 'நான் இல்லை என்னை விடுங்க.. நான் போறேன்...' என வாகனத்தில் ஏறாமல் ஒருவர் அடம் பிடித்தார். வேட்டியுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர் கைது எனக் காவல்துறை அழைத்தவுடன் கூச்சலிட்டு கதறிய முதியவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.