Advertisment

தாம்பரம் அருகே பிரபல ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

 Tambaram incident... police action

தாம்பரம் அருகே காட்டில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியான சச்சின் என்பவர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

தாம்பரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி லெனின். இவரது வலதுகரமாக செயல்பட்டவர் ரவுடி சச்சின். 22 வயதான இவர் மீது சோமங்கலம், குன்றத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இரண்டு கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. பல்வேறு நாட்களாக சச்சினை சோமங்கலம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் கல்லூரி அருகில் இருக்கக்கூடிய பூததண்டலம் எனும் காட்டு பகுதியில் ரவுடி சச்சின் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisment

அதனடிப்படையில் சோமங்கலம் காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவுடி சச்சினை பிடிக்க முயன்றனர். அப்பொழுது ரவுடி சச்சின் அங்கிருந்து தப்ப முயன்று, பிடிக்க வந்த காவலர் பாஸ்கரன் என்பவரை கத்தியால் வெட்ட முயன்றுள்ளான். இதனால் தற்காப்பிற்காக ஆய்வாளர், சச்சினின் வலது காலில் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். தற்பொழுது குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரவுடி சச்சினை சிகிச்சைக்காக போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

rowdy thamparam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe