கடந்த 15ம் தேதி தாம்பரத்தில் இரட்டைக் கொலை நடந்தது. பிரதீப் குமார், சுரேஷ் ஆகிய இரு ரவுடிகளும் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

tambaram

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த தென்சென்னை இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வுசெய்தனர். மேலும் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

Advertisment

இந்நிலையில், இன்று கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் பூபாலன், மணிகண்டன், ஜெயபாபு, அன்பழகன் ஆகிய நான்கு பேரை திருவள்ளூர் அருகே தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பாபு உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.