Advertisment

உதயமானது தாம்பரம் மாநகராட்சி... அவசரச் சட்டம் பிறப்பிப்பு!

Tambaram Corporation Emergency law issued!

தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

Advertisment

இதனால் தமிழ்நாட்டின் 20 வது மாநகராட்சியாக உதயமாகியுள்ளது தாம்பரம்.பத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தாம்பரம் உள்ளிட்ட ஐந்து நகராட்சிகள் மற்றும் ஐந்து பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாம்பரம் உள்ளிட்ட காஞ்சிபுரம், கடலூர், கரூர், சிவகாசி உள்ளிட்ட இடங்கள் மாநகராட்சியாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்டமாக நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தற்பொழுது தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ள நிலையில்,வார்டு வரையறை முடிந்த பின் நகராட்சி தேர்தல் நடைபெறும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TNGovernment Corporation thamparam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe