Advertisment

ஓட்டல் உரிமையாளர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர்கள்!

tambaram chicken rice issue evidence in cctv footage 

Advertisment

சென்னை தாம்பரம்சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் அண்ணாநகர் மெயின் ரோட்டில் கிருதிஷ் செட்டிநாடு ஹோட்டல் என்ற பெயரில் துரித உணவகம் நடத்தி வருபவர் ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயமணி. இவரது கடையில் நேற்றிரவு 10.30 மணியளவில் அஜித், கார்த்திக் மற்றும் இருவர் வந்து நான்கு சிக்கன் ரைஸ் கேட்டுள்ளனர். கடையின் உரிமையாளரும் சிக்கன் ரைஸ் பார்சல் கட்டிக் கொடுத்துள்ளார். பார்சலை வாங்கிக் கொண்டு பணத்தை பிறகு தருவதாகக் கூறிசிக்கன் ரைஸை எடுத்துச் செல்ல முயன்ற போது, பணத்தைக் கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு கடையின் உரிமையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் அஜித் மற்றும் கார்த்திக் கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்துவிட்டுச் சென்றுவிட்டனர். பின்னர் 11.15 மணிக்குமேலும் 4 நண்பர்களுடன்உணவகத்திற்கு வந்த அஜித்ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகனை ஆபாசமாகத்திட்டி கடாயில் சூடாக இருந்த எண்ணெய்யை எடுத்து அவர்கள் மீது ஊற்றிவிட்டு அங்கு இருந்த அடுப்பு, பாத்திரங்களை எடுத்து சரமாரியாகத்தாக்கிவிட்டுஉணவகத்தில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் முழுவதும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் தீக்காயமடைந்த ஜெயமணி, அவரது மகன் மணிகண்டன் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த கடையில் பணிபுரியும் ஊழியர் நேமராஜ் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாடம்பாக்கத்தை சேர்ந்த அஜித், கார்த்திக் (எ) ஹரிஹரன், பிரவின் (எ) ஜாகோ, சிவா, விக்கி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரைத்தேடி வருகின்றனர். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சேலையூர் போலீசார் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

tambaram
இதையும் படியுங்கள்
Subscribe