வேலூர் மாநகரில் அண்ணாசாலையில் புதியதாக திறக்கப்பட்டது ஒரு பெரிய நகைக்கடை. இந்த கடை திறப்பு விழாவுக்கு சினிமாத்திரை நட்சத்திரமான நடிகை தமன்னா வேலூருக்கு 2019 ஜனவரி 5ந்தேதி வருகை தந்து அந்த நகைக்கடையை திறந்துவைத்தார்.

Advertisment

thamana

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திறப்பு விழாவுக்கு வருகை தரும் நடிகை தமன்னாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என தனியார் கடை கேட்டுக்கொண்டதால் அந்த கடை முன்பும், சாலையிலும் போலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன்படி வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மைதிலியை கடை வாசலில் பணிக்குஒதுக்கியிருந்தனர். அவரும் பாதுகாப்பு பணியை செய்துக்கொண்டிருந்தார்.

Advertisment

தமன்னா கடையை திறக்க வந்தபோது நூற்றுக்கணக்கான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையில் நின்றிருந்தனர். தமன்னா கடையை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். கடையை வலம் வந்தபோது, அவரை காவல்துறை ஆய்வாளர் மைதிலி, நடிகை தமன்னாவிடம் நேரடியாகவே, வெளியே திரண்டு நிற்கும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் சாலை போக்குவரத்தின்போது பொதுமக்கள் கவனமாக பயணிக்க அறிவுரை வழங்குங்கள், நீங்கள் அப்படி சென்னால் அது பொதுமக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனக்கேட்டுக்கொண்டார்.

thamana

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கடைக்கு வெளியே சாலையில் திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து பேசிய நடிகை தமன்னா, இருசக்கர வாகனத்தை ஓட்டும் போது தலைகவசம் அணியவும், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிந்து எனது ரசிகர்கள், பொதுமக்கள் வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள், அதுநமது உயிரை காக்கும் என்றார்.

திறப்பு விழாவுக்கு வந்தவர் திடீரென ஆய்வாளரின் பேச்சை கேட்டு சமூக சேவகியாகி மாறிய தமன்னாவை கண்டு அந்த ஆய்வாளரை மட்டும்மல்ல நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பாலானவரை ஈர்த்தது.