சீனிவாசன், பூபதி
தமிழக சட்டப்பேரவைக்கு புதிய செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் செயலாளராக இருந்த பூபதியின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், அவர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர், கடந்த 2017ம் ஆண்டு மே 31ம் தேதி பொறுப்பெற்றார்.
தற்காலிகமாக துணை செயலாளர் அனி ஜோசப்பை பொறுப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்திருந்தது. இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவைக்கு புதிய செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.