Advertisment

டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பல்லி - கடுப்பாகி குடிமகன் செய்த செயல் 

Tamac issue near tirupattur

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்தவர்பிரபாகரன். இவர்வீரகமேடு பகுதியில் அரசுக்குச் சொந்தமான மதுபானக்கடையில்ஒரு மது பாட்டிலை வாங்கிச் சென்றுள்ளார்.

Advertisment

அப்போது அதனைத்திறந்து பார்த்தபோது மது பாட்டில் உள்ளே பல்லி இறந்து கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகமதுபான கடைக்குச் சென்று இந்த மது பாட்டிலில் பல்லி உள்ளது. அதனால், அதனை மாற்றித்தரும்படி கேட்டுள்ளார். இதற்கு மதுபான கடை ஊழியர்கள் நக்கலாக இவரைப் பார்த்து சிரித்துள்ளனர்.

Advertisment

மது பாட்டில் எதற்காக திறந்து எடுத்து வந்தீர்கள் அப்படியே எடுத்துக் கொண்டு வர வேண்டியதுதானே எனப் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது செல்போனில் அனைத்தையும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவச் செய்துள்ளார்.

நான் மது போதையில் இருக்கிறேன். இதை தெரியாமல் பல்லி விழுந்த பாட்டிலில் உள்ள மதுவை நான் குடித்திருந்தால் இந்நேரம் செத்து போயிருப்பேன். எனது சாவுக்கு யார் காரணம் எனவும், பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் அதிகமாக வசூலிப்பவர்கள் ஒழுங்காபார்த்துதானே தரணும் எனப் பல்வேறு கேள்விகளைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தது வைரலாகி வருகிறது.

TASMAC TIRUPATTUR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe