தமிழ்நாட்டில் தொடரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணிக்காக விளையாடும் எம்.எஸ்.தோனி மற்றும் கேதர் ஜாதவ் அவர்களின் புதல்விகளான சிறுமிகளையும், திரைக் கலைஞர் விஜய் சேதுபதியின் சின்னஞ்சிறு குழந்தையையும், ஆபாசமாக வலைதளங்களில் பதிவு செய்து வருகிற காட்டுமிராண்டிகளின் மீதும், குறிப்பிட்ட வழக்குகளில் வாதிடும் வழக்கறிஞர்கள் மற்றும் சில எழுத்தாளர்களை ஆபாசமாக மிரட்டுபவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை தல்லாகுளம் போஸ்ட் ஆஃபீஸ் முன் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.