Skip to main content

மூன்றாவது அணிக்கான பேச்சுவார்த்தை??- தெலுங்கானா முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

Published on 29/04/2018 | Edited on 29/04/2018

 

 திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல்தலைவர்  முக.ஸ்டாலினை சந்திக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இன்று கோபாலபுரம் இல்லம் வந்தார்.

முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த சந்திரசேகரராவை ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ,டிஆர் பாலு மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். கலைஞர் கருணாநிதியை சந்தித்து அவர் உடல்நலம் பற்றி விசாரித்த சந்திரசேகரராவ் பின்பு அங்கிருந்து ஸ்டாலின இல்லத்திற்கு சென்று பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத புது அணி அமைப்பது பற்றி சுமார் ஒருமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன .

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழா - சட்டப்பேரவையில் அறிவிப்பு 

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

mk stalin

 

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்  பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெற்றவர் கலைஞர் எனப் புகழாரம் சூட்டி, தமிழகத்திற்கு அவர் செய்த அனைத்து நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார். 

 

அதனைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், இத்தகைய மாபெரும் தலைவருக்கு இந்த அரசு தனது வரலாற்றுக்கடமையை செய்ய நினைக்கிறது. கலைஞர் பிறந்ததினமான ஜூன் 3ஆம் நாள் இனி அரசு விழாவாக தமிழகத்தில் கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார். மேலும், வரும் ஜூன் 3ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞருக்கு கம்பீர சிலை நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.  

 

 

Next Story

கலைஞர் நினைவிடத்தின் புகைப்படம் வெளியீடு!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

j

 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினா கடற்கரையில் 39 கோடி செலவில் 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24.08.2021) காலை சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது கலைஞர் நினைவிடத்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நினைவிடத்தின் முன் கலைஞர் பயன்படுத்தியதைப் போன்று பெரிய அளவிலான பேனா இடம்பெற உள்ளது.