Skip to main content

அரசுடனான ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி!!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

 

jakto jio

 

சென்னையில் தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல்கள் வந்துள்ளது.

 

புதிய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் இது தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

 

இதுபற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், அமைச்சர்கள் எங்கள் கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனக்கூறினார்களே தவிர எந்த உறுதியும் அளிக்கவில்லை  என  தெரிவித்தனர். இந்த பேச்சு வார்த்தை தோல்வியை அடுத்து நாளை நடக்கும்  ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனக்கூறினர்.

 

மீண்டும் அரசுடன் பேச்சுவார்த்தை சுமூகத்திகள் முடியவில்லை என்றால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றே தெரியவருகிறது.    

 

சார்ந்த செய்திகள்