Taking advantage of the rainy season to break coins in the temple

Advertisment

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலுச்சம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஊரின் நடுவில் இந்த மாரியம்மன் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் இரவில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் ரூ. ஆயிரத்தை கொள்ளையடித்து எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பூசாரி வந்து பார்த்தபோது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். உண்டியலில் மேலும் ரூபாய் நாணயங்கள் இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த கோவிலின் திருவிழா நடந்து முடிந்தது. இதையொட்டி உண்டியல் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டது. இதனால் பெரிய அளவிலான திருட்டு தடுக்கப்பட்டுள்ளது.