Advertisment

திருவோணத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடன் விடுதலை செய்திட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றிய விவசாயிகள் சங்கம் சார்பில் கருகிய பயிருக்கு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருவோணம் வட்டாட்சியர் அலுவலக்திற்க்கு முற்றுகையிட சென்ற கே .சின்னத்துரை தலைமையிலான 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை வழியிலேயே காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

Advertisment

இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் RD0விடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதனை காவல்துறை ஏற்க மறுத்ததால் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட முயற்ச்சித்துள்ளனர் இதனை ஏற்க மறுத்து காவல்துறை வலுகட்டாயமாக கைது செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் உடன் தலையிட்டு நிபந்தனையின்றி விடுதலை செய்திட வலியுறுத்துகிறேன்.மேலும் RDO அவர்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

p.r.pandian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe