protest against admk govt

Advertisment

தமிழக அரசு அறிவித்த ஊரடங்குகால நிவாரணத் தொகை மூவாயிரம் ரூபாயை அனைவருக்கும் வழங்க வேண்டும், 10 மாதமாக வழங்காமல் உள்ள ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தையல் தொழிலாளர் சம்மேளனம் சார்பில், தி.நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தையல் சம்மேளன தலைவர் பி.சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, தென்சென்னை மாவட்ட செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.