சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் - பவானி தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள். 3 மகள்களும் அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இதில் ஜீவிதா நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

Advertisment

Tamilisai Soundararajan

ஜீவிதா பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கையில், எங்கள் அப்பா ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தில்தான் எங்களை படிக்க வைத்தார். ஏழ்மை நிலையில் உள்ள எங்கள் குடும்பத்தில் இருந்த என்னை மருத்துவராக படிக்க வைக்க முடியுமா என பல நாட்கள் நினைத்துள்ளேன். இந்த நிலையில் நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன் என்றார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

Advertisment

நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஏழை தையல் தொழிலாளர் மகள் மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.