Skip to main content

தாசில்தார் அலுவலகத்தில் தண்ணீரும் இல்லை... குடிநீர் வடிகால் வாரியத்தில் பணமும் இல்லை... திமுக குற்றச்சாட்டு

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

 


செந்துறை வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தில் குடிக்க தண்ணீரும் இல்லை, தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணமும் இல்லை என்று செந்துறை திமுக ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 water


 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டம், செந்துறை வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தை 10-10-1999 அன்று திமுக ஆட்சிகாலத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ். சிவசுப்பிரமணியம் முன்னிலையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த நாஞ்சில் கி. மனோகரன் திறந்துவைத்தார். 

 

 water



வாழ்வாதாரத்திற்கு தேவையான அரசு சார்ந்த உதவிகளுக்கு பொதுமக்கள் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தரும் இடமாக இந்த வட்டாச்சியர் அலுவலகம் உள்ளது. மக்கள் குறை தீர்க்கும் அலுவலகத்தில் கடந்த 6 மாதமாக தண்ணீர் பஞ்சம்.
 

 குடிநீர் வடிகால் வாரியத்திற்க்கு பலமுறை தகவல் தந்தும் போதிய நிதி இல்லாததால் எங்களால் புதிய ஆழ்குழாய் கிணறு போட முடியாது என மறுத்து வருகின்றனர். 


 

இந்நிலையில் வட்டாச்சியர் அலுவலகத்தில் பணியுறியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்பாட்டுக்கும் தண்ணீர் இல்லை. பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் தண்ணீர் இல்லாத நிலையில் செந்துறை வட்டாச்சியர் அலுவலகம் உள்ளது. 
 

வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அருகில் பத்திரப்பதிவு அலுவலகம், அரசு கருஊலம், ஊட்டச்சத்து அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக சேமிப்புக் கிடங்கு ஆகிய அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 
 

மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடி கவனம் செலுத்தி வட்டாச்சியர் அலுவலகத்தில் புதிய ஆழ்குழாய் போர் போட்டு தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேண்டும். மேலும்  RO System அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்றார். 



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.