Advertisment

தப்பி ஓடிய கும்பல்;  டிராக்டரை ஓட்டி வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த  வட்டாட்சியர்

tahsildar confiscated the tractor and to handed it over  Police Station.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து மர்ம நபர்கள் டிராக்டர் வாகனத்தில் தொட்டி கல்லை ஏற்றி வந்தனர். அப்போது வட்டாட்சியரை பார்த்த டிராக்டர் ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த நபர்கள் உடனடியாக டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

Advertisment

tahsildar confiscated the tractor and to handed it over  Police Station.

பின்னர் சந்தேகமடைந்த வட்டாட்சியர் குமார் வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்திற்கு எந்த ஒரு ஆவணங்களும்இல்லை என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் வரை வட்டாட்சியர் குமார் டிராக்டரை ஓட்டி வந்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்துநாட்றம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisment

police tahsildar TIRUPATTUR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe