Advertisment

திண்டுக்கல்லில் பரபரப்பு: மாணவி மீது ஆசிட் வீச்சு


திண்டுக்கல்லில் பரபரப்பு: மாணவி மீது ஆசிட் வீச்சு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியை சேர்ந்தவர் காயத்ரி பிளஸ் 2 மாணவி. கடந்த 5ம் தேதி இரவுஇவரது வீட்டில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் காயத்ரி மற்றும் குடும்பத்தினர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்குசென்று தூங்கினார். நேற்று முன்தினம் அதிகாலை காயத்ரி திடீரென அலறினார்.அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது தலைமுடி கருகிய நிலையில் வலியால் காயத்ரி துடித்தார். அதிர்ச்சியடைந்தபெற்றோர் உடனடியாக அவரை நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சையளிக்கப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது.புகாரின்படி நிலக்கோட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து ஆசிட் வீசிய நபர் யார், எதற்காக வீசினார் என்பது குறித்துவிசாரிக்கின்றனர். பிளஸ் 2 மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe