tablet incident at ramanathapuram

Advertisment

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானியை அடுத்துள்ள புதுமடம் பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 7 லட்சம் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகளை கடத்த முயன்றுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தவவலின் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொண்ட கடலோரக் காவல்படை பிரிவு போலீஸார் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.