Advertisment

மயக்க ஊசி செலுத்தியும் தப்பித்த 'டி23'-மசினகுடியில் பரபரப்பு!

 't23' who escaped by injecting anesthetic - a commotion in Machinakudi!

Advertisment

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்களை அச்சுறுத்திவந்த 'டி23' புலியை 21 வது நாளாக வனத்துறையினர் தேடிவருகின்ற நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்ட'டி23' புலி தப்பித்துள்ளது. முன்னதாக 'டி23' இறந்திருக்கலாம் எனக் கருதிய வனத்துறை உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலியை வனப்பகுதியை ஒட்டியுள்ள நீர்நிலைப் பகுதிகளில் தேடினர்.

8 நாட்களுக்குப், பிறகு கடந்த 12 ஆம் தேதி ஒம்பெட்டா வனப்பகுதியில் கண்காணிக்க வைக்கப்பட்ட இமேஜ் ட்ராப் கேமராவில் அதிகாலை 3 மணிக்கு 'டி23' புலியின் உருவம் பதிவாகியது. இதனால் மீண்டும் புலி, தேவன் எஸ்டேட், மேல் பீல்டு பகுதிக்குப் புலி திரும்ப வருவதை உறுதி செய்ததோடு தேடுதல் வேட்டையை மீண்டும் திவீரப்படுத்தியது வனத்துறை.

alt="udanpirape" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="285bf0c2-b85d-4ef9-9c84-f565046e632a" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_73.jpg" />

Advertisment

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மயக்க ஊசி செலுத்தப்பட்ட 'டி23' புலியானது தப்பித்தது. தப்பிய புலியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்வுடன் காணப்படும். இதனால் ஊர்மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பலகட்ட முயற்சிகளுக்கு பிறகுமயக்க ஊசி செலுத்தியும் புலி சிக்காததுமசினகுடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை நான்கு மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் 'டி23' கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Forest Department tiger nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe