ttvdhinakaran-eps

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில்,

யார் இந்த டி.டி.வி.தினகரன்? என முதல்-அமைச்சர் பழனிசாமி கேட்கிறார். பழனிசாமி யாரால் முதல்-அமைச்சர் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். கட்சியில் இல்லாத என்னை, எங்கள் துணை பொதுசெயலாளர் என்று தேர்தல் ஆணையத்தில் ஏன் மனு கொடுத்தீர்கள்? ஆர்.கே.நகர் தொகுதியில் எனது ஜீப்பில் தொற்றிக்கொண்டு ஏன் ஓட்டுக் கேட்டீர்கள்? அ.தி.மு.க. எங்கள் வசம்தான் உள்ளது. இந்த ஆட்சி கலைந்தால் அனைவரும் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் வாங்குவதற்காக ரூ.150 கோடி செலவு செய்தீர்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்தபோது இரட்டை இலைச்சின்னம் வெற்றிச்சின்னமாக இருந்தது. இப்போது துரோகிகளிடம் அந்த சின்னம் உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையை நாமே தோற்கிறோமோ என்ற வருத்தம் என்னிடம் இருந்தது. இரட்டை இலை தோற்றால் தான் அதை நாம் மீட்க முடியும் என்பதற்காக தோற்கடித்தோம். இல்லையென்றால் உதய சூரியன் சின்னம் வெற்றி பெற்று இருக்கும்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

8 வழி பசுமை சாலை திட்டத்தால் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் முதல்-அமைச்சர், விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்குகிறார்கள் என்று கூறி வருகிறார். இவ்வாறு பேசினார்.