Advertisment

திவாகரன் பக்கம் போவதை தடுப்பது எப்படி? தினகரன் ஆலோசனை

T. T. V. Dhinakaran

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக நேற்று அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம் எல்.ஏ க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற சேர்தலில் மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றாமலும், தற்போது உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதாலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை யாரிடம் கூறுவது என்று தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு தீர்வு காணும் விதமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக 22 தொகுதியிலும் இருந்து உண்ணாவிரதம் இருப்பதாகவும் ஒவ்வொரு தொகுதியிலும் டிடிவி மூலமே உண்ணாவிரதம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

Advertisment

அடுத்த மாதம் 10ஆம் தேதி ஆண்டிப்பட்டியில் தொடங்கி 21ஆம் தேதி ஆர் கே நகரில் முடிக்க உள்ளனர்.இதன் தொடர்பான அனைத்து முன் ஏற்பாடு நடந்து வருகிறது.

Advertisment

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் செய்தித் தொடர்பாளராக இருந்த சிவசங்கரி, கட்சி கட்டுப்பாட்டை மீறி திவாகரன் குரூப் கலந்து கொண்ட டிவி விவாதத்தில் கலந்து கொண்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ளவர்களை திவாகரன் இழுப்பதை எப்படி தடுப்பது என்பது பற்றியும் விவாதித்தனர்.

T. T. V. Dhinakaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe