எங்கள் கட்சியினர் மீதான தாக்குதல் தொடருமானால் மிப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று டி.டி.வி. தினகரன் எச்சரித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி கழக செயலாளர் களஞ்சியம் ராஜா, மண்டபத்தில் உள்ள மீனவர் கூட்டுறவுச் சங்க தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக, ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் களஞ்சியம் ராஜாவை, அவர் இல்லம் அருகே வைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dhinakara.jpg)
காவல் துறை துணை போவதால்தான் வன்முறைச் செயல்கள் அதிகரித்து கொண்டே போகிறது. கொடூர தாக்குதல் நடத்திய அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தொடர்ந்து இதைபோன்று செயல்கள் நடக்குமேயானால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் எச்சரிக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)