Advertisment

பூட்டிக்கிடக்கும் பாத்ரூம்! தி.நகர் நடேசன் பார்க் அவலம்! -நக்கீரன் ஆக்‌ஷன் ரிப்போர்ட்! 

பொதுமக்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யத்தான் மாநகராட்சி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பூங்காக்களுக்கு வந்து பொதுமக்கள் பலரும் பயனடைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், பூங்காக்கள் திறந்திருக்கும் நேரங்களில் கழிவறைகள் மூடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சென்னை தி.நகரிலுள்ள பிரபல நடேசன் பூங்காவில் கழிவறைகள் மூடப்பட்டிருக்கும் தகவல் கிடைக்க விசாரித்தோம்.

Advertisment

“பாத்ரூம் ஏம்மா மூடியே கிடக்கு?” அங்கு வேலை செய்துகொண்டிருக்கும் பெண்மணி ராணியிடம் பொதுமக்களில் ஒருவரைப்போல நாம் கேட்டபோது, “நாலரை அஞ்சு மணிக்குமேல திறப்பாங்க. அதுக்கு, முன்னாடி திறந்தா அசுத்தம் பண்ணிடுவாங்களே யாரு பொறுப்பு? நீங்க பொறுப்பேத்துக்குவீங்களா? எதுக்கு விசாரிக்கிறீங்க?”என்று எடுத்த எடுப்பிலேயே கோபமானார்.

Advertisment

“ஏம்மா கோபப்படுறீங்க? இன்சார்ஜ் யாரு?” என்று நாம் கேட்டபோது, ”அவரு, எப்போ வருவாரு? எப்போ போவாருன்னுல்லாம் எங்களுக்கு தெரியாது. போயி, நாளைக்கு காலையில 7 மணிக்கு வந்து கேளுங்க”என்றார் நம்மிடம் இன்னும் கோபமாகி.

இதுகுறித்து, 10-வது மண்டலம் கோட்டம்-136 பகுதி- 30 தி.நகர் நடேசன் பூங்காவை பராமரித்து கண்காணிக்கும் ஏ.இ. விஸ்வநாதனின் எண்ணுக்கு தொடர்புகொண்டபோது அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்தது. எக்ஸிகுட்டிவ் என்ஜினியர் கண்ணனின் கவனதுக்குக்கொண்டுசென்றபோது, “உடனடியாக, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறைகளை திறந்துவைக்கச்சொல்கிறேன்” என்றார் உறுதியுடனும் பொதுமக்கள் நலனில் அக்கறையுடனும்.

பொதுமக்கள் புகார் கொடுத்து அது ஊடகங்களில் வெளியாகி பிறகு திறந்து வைப்பதற்குமுன் அனைத்து பூங்காக்களிலும் பொதுமக்கள் பயன்படும் வகையில், கழிவறைகளை திறந்து வைத்து சரியான முறையில் பராமரிப்பது நல்லது.

Chennai closed bathroom T nagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe