Advertisment

தி.மலை ஏடிஎம் கொள்ளை; கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு

 T. Malai ATM Robbery; Bandits photo release

கடந்த 12 ஆம் தேதி திருவண்ணாமலையில் நான்குஏடிஎம்களில்70 லட்சத்திற்கும் மேலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்டவிசாரணைக்குபிறகு முக்கிய குற்றவாளிகள் இருவரை தற்போதுபோலீசார்கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தஐஜிகண்ணன், ''வழக்கில் ஒருலீட்கிடைத்துள்ளது எனச் சொல்லி இருந்தேன்.அப்படிகிடைத்த அறிவியல்பூர்வமான ஆதாரத்தை வைத்து நம்முடையடீம்மூன்று இடத்தில்ஆபரேட்செய்து கொண்டிருக்கிறோம். ஒன்று கர்நாடகா கோலாரில்கேஜிஎஃப்இடத்தில், இன்னொன்று குஜராத்தில் ஒருடீம்உள்ளார்கள். விசாரணை இன்னும் முடியவில்லை. திருட்டில் ஈடுபட்டவர்கள் ஹரியானாவிலிருந்து வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஈடுபட்ட சில பேருடைய மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்துள்ளது. விசாரணை விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடும்'' எனக் கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில், திருவண்ணாமலைஏடிஎம்கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் தலைவன் உள்பட இரண்டு பேரைபோலீசார்கைது செய்துள்ளனர். கும்பல் தலைவன்ஆரிப், ஆசாத்ஆகியோரைஹரியானாவில் வைத்து தனிப்படைபோலீசார்கைது செய்துள்ளனர்.ஹரியானாவிலிருந்து கொள்ளையர்களை விமானத்தில் தனிப்படைபோலீசார்அழைத்து வருகின்றனர்எனதகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களின் படங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ATM police thiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe