Advertisment
இன்று (20.10.2022) சென்னை மெரினாவில் அவசர உதவி மையம்துவங்கி வைக்கப்பட்டுள்ளது. மெரினா நீச்சல் குளம் பின்புறம் ( கண்ணகி சிலை பின்புறம்) உயிர்காப்பு பிரிவு என்ற கடலில் மூழ்குதல் தடுக்கும் பிரிவைத்துவங்கினர். முதல்வரின் உத்தரவின் பேரில் துவங்கப்பட்ட இந்த பிரிவைத்தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.