
வேலூரில் பட்டாக்கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞர்கள் இருவரை போலீசார் துரத்திப் பிடித்து கைது செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரின் மையப்பகுதியான க்ரீன் சர்க்கில் பகுதிக்கு அருகில் குறவர் இனமக்கள் பச்சைகுத்தும் தொழிலில் ஈடுபட்டுவந்தனர். சாலையோரத்தில் பச்சைகுத்தும் தொழில் செய்துவந்த இளைஞர்களிடம் சல்வன்பேட்டை பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பாலாஜி, கிஷோர், லிங்கேஸ்வரன் ஆகிய மூன்றுபேரும் பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர். ஒரு செல்ஃபோன் மற்றும் பணம் 1500 ரூபாய் பறித்துள்ளனர். அந்த நேரத்தில் அந்த வழியே சென்ற வேலூர் எஸ்.பி செல்வகுமார் நேரில் பார்த்து பட்டாக்கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞர்கள் மூவரையும் துரத்தினார். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் எஸ்.பி மற்றும் போலீசார் சேர்ந்து கிஷோர் மற்றும் லிங்கேஸ்வரன் என்ற இருவரை மட்டும் கைதுசெய்துள்ளனர். தப்பியோடிய பாலாஜி என்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பிடிபட்ட இரண்டு பேரிடமும் இருந்து ஒரு செல்ஃபோன், இரண்டு பட்டாக்கத்தி, 1,500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அங்குப் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.