Advertisment

குமரியில் பரவி வரும் பன்றி காய்ச்சலால் மக்கள் அச்சம்!!!

Swine flu

Advertisment

குமாி மாவட்டத்தில் பரவி வரும் பன்றி காய்ச்சலால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். இதுவரை பாதிக்கப்பட்ட 5 போ் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றனா்.

குமாி மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பொியவா்களுக்கு இருமல், சளி, விட்டு விட்டு வரக்கூடிய காய்ச்சல்களால் அவதி பட்டு வருகின்றனா். இதனால் தனியாா் பாிசோதனை நிலையங்களிலும் அதுபோல் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் வெளி நோயாளிகளின் வருகை வழக்கத்துக்கு மாறாக அதிகாித்துள்ளது.

இங்கு வரும் நோயாளிகளின் ரத்த மாதிாியை சோதித்ததில் பலருக்கு பன்றி காய்ச்சலுக்கான அறிக்குறி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நாகா்கோவில் ராமன்புதூரை சோ்ந்த ஒய்வு பெற்ற பேராசிாியை ஓருவரும் அதே போல் புத்தோாி பகுதியை சோ்ந்த ஒருவரும் கோட்டாா் பகுதியை சோ்ந்த இன்னொருவா் என 3 போ் ஆசாாிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றனா். மற்ற இருவா் தனியாா் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisment

மேலும் மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவா் திடீரென்று இறந்துள்ளாா். இதுவும் மருத்துவமனை நோயாளிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டா் பிரசாந்த் வடநேரா கூறும் போது... பன்றி காய்ச்சல் என்பது காற்று மூலம் பரவும் ஓரு வைரஸ் ஆகும். இதனால் ஓருவாிடமிருந்து இன்னொருவருக்கு பரவ கூடும். மேலும் சிலருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக மருத்துவா்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அது மேலும் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் இதற்கென்று சிறப்பு வாா்டுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அச்சம் பட தேவையில்லை என்றாா்.

Swine flu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe