Advertisment

காதல் ஜோடி அடித்துக்கொலை - காவிரியில் உடல்கள் மீட்பு!

h

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூடைக் காந்த பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த சுவாதியும், இளைஞர் நந்தீஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் கடும் எதிர்ப்பு நிலவியதை அடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டார்கள். திருப்பூரில் தங்கியபடி இருவரும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

திடீரென இருவரும் காணாமல் போனார்கள். 13.11.2018 அன்று, நந்தீஸும் சுவாதியும் கர்நாடகா மாண்டியா பகுதியில் காவேரியில் பிணமாக கரை ஒதுங்கியுள்ளனர். உள்ளூர் மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து அவர்கள் இருவரும் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட நந்தீஸ்-சுவாதி இணையர்கள்தான் என்பதை கண்டறிந்தது கர்நாடக காவல்துறை.

பிணக்கூறாய்வு மூலம், இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் கண்டறியப்பட்டுள்ளன.

Advertisment

இருவரும் சாதி ஆணவத்தால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

swathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe