Skip to main content

நின்று நிதானமாக பதிவிட்டிருக்கிறார் எஸ்.வி.சேகர்: மன்னிப்பு என்பது நாடகம்: மனுஷ்யபுத்திரன் கண்டனம்

Published on 20/04/2018 | Edited on 21/04/2018


 

manushyaputran 600


திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் பற்றியும், பெண் பத்திரிகையாளர்களையும் மிகவும் அவதூறாக விமர்சித்து பதிவிட்டது தமிழ்நாடு முழுக்க பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

இதுகுறித்து எழுத்தாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவிக்கையில், 
 

எஸ்.வி.சேகர் அவரைப் பற்றி அல்லது பாஜகவைப் பற்றி இழிவாக ஒரு பார்வேடு மெசேஜ் வந்தால் அதனை படிக்காமல் ஷேர் பண்ணுவாரா? இன்னொன்று அவர் ஷேர் செய்யவில்லை. ஸ்கீரின் ஷாட் எடுத்து தேசிய கொடி போன்றவைகளை சேர்த்து நின்று நிதானமாக பதிவை வெளியிட்டிருக்கிறார். அதற்கான ஆதாரத்தையும் என்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். 

திட்டமிட்டு எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் இந்த வெறுப்பு பேச்சுக்களை பரப்பி வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம், தாங்கள் தொடர்ந்து ஊடகங்களில் டிரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பததற்காக, எல்லோரும் தங்கள் கட்சியைப் பற்றியோ அல்லது தங்களைப் பற்றியோ பேச வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். 
 

எஸ்.வி.சேகர் எழுதப்படிக்கத் தெரியாத நபர் அல்ல. தெளிவாக ஸ்கீரின் ஷாட் எடுத்துத்தான் போட்டியிருக்கிறார். இன்னொன்று அவர் செய்த குற்றத்தை அவர் உடனடியாக மறைக்க முயற்சிப்பதினால், அவர் செய்த குற்றம் என்ன என்பதை காட்டுவதற்காக பலரும் அதனை முகநூலில் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர் குற்றம் செய்தது தவறில்லையாம். அந்த குற்றத்தை சுட்டிக்காட்டினால் அது தவறாம். 
 

ஆகவே அவர் சொல்வதெல்லாம் மிகப்பெரிய பொய்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இன்றைக்கு வருத்தம் தெரிவிப்பார். நாளைக்கு இதைவிட மோசமான ஒன்றை, ஏதாவது ஒரு எதிர்க்கட்சியை நோக்கியோ அல்லது ஒரு மாற்று சிந்தனைகளை நோக்கியோ அல்லது தமிழகத்தில் போராடக்கூடிய இளைஞர்களைப் பற்றியோ கூறுவார். அப்படிப்பார்க்கிறபோது அவருடைய இந்த மன்னிப்பு என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். 
 

svsekar 250.jpg


 

சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையிலும், பெண் பத்திரிக்கையாளர்களை தாக்கி அவர் பதிவிட்ட செயல் என்பது உண்மையில் ஒரு கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு அவருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர் மன்னிப்பு கேட்பது என்பது மிகப்பெரிய நாடகம். அப்படிப்பார்த்தால் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு பின்னர் மன்னித்துவிடுங்கள் என்று சொல்லலாம். 
 

நாளைக்கு ஒரு வகுப்பு கலவலத்தை உண்டாக்கக்கூடிய பேச்சை ஒருவர் பேசிவிட்டு, அதனால் ஒரு கலவரம் உருவாகி, பின்னர் மன்னித்துவிடுங்கள் என்று சொன்னால் விட்டுவிடுவார்களா. ஒரு ஜாதி கலவரத்தை உருவாக்கக்கூடிய பேச்சை ஒருவர் பேசிவிட்டு, அதனால் ஜாதிக்கலவரம் உருவானால் அவரை விட்டுவிடுவார்களா. இதுபோன்ற குற்றச் செயல்களை செய்துவிட்டு என்னை மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கேட்பது ஏமாற்று வேலை. 
 

இப்படித்தான் எச்.ராஜா சொன்னார், பெரியாரை பற்றி இழிவாக பதிவு செய்துவிட்டு, அது என் அட்மின் என்றார். தங்கள் கருத்துத்தான் என்று சொல்வதற்கு கூட துப்பில்லாதவர்கள் இவர்கள். கோழைகள் போல எதிர்ப்பு வந்ததும் ஓடி ஒளிகிறார்கள். பிறகு வேறொரு வகையில் உள்ளே வந்து புதிய பிரச்சனையை கிளப்புவது இவர்களின் வாடிக்கை. இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்பது எனது கோரிக்கை. இவ்வாறு கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க ஜெயிக்காது” - எஸ்.வி. சேகர்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

 SV Shekhar says BJP will not win in Tamil Nadu until Annamalai is there

 

அண்ணாமலை பா.ஜ.க தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ.வும், திரைப்பட நடிகருமான எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி. சேகர் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வந்தாலும் 2026 ஆம் ஆண்டு கூட இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை.

 

அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிராக அனைத்து விஷயங்களையும் செய்கிறார். அண்ணாமலை இருக்கும் வரை அதிமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அதேபோல், தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை தொடர்ந்து இருந்தால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பு இல்லை. காசு கொடுத்து, பிரியாணி கொடுத்து தினமும் 300 பேர் பஸ் ஸ்டாண்ட் வரை நடப்பதால் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?

 

அண்ணாமலை தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வில் நான் இருக்க மாட்டேன். அதைப் பற்றி மோடி என்னிடம் கேட்கட்டும். அதற்கு நான் பதில் கூறுகிறேன். அண்ணாமலை போன்றவர்கள் தலைமையில் தனித்து இயங்குவது படு வேஸ்ட். அண்ணாமலை நின்ற தொகுதியிலேயே அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவரும், சீமானும் ஒரே தொகுதியில் நின்றாலும் அவரை விட சீமான் தான் அதிகமான வாக்குகள் பெறுவார். இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான். தி.மு.க அரசு கொண்டு வந்த காலை உணவுத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாகும்” என்று கூறினார்.  

 

 

Next Story

“தமிழ் இலக்கியம் என்பது இன்று சர்வதேச இலக்கியமாக மாறிவிட்டது” - மனுஷ்யபுத்திரன்

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

"Tamil literature and culture is our land" - Manushyaputhiran

 

தமிழகத்தில் உள்ள  இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு குடியரசு தினத்தன்று கவிதை, கட்டுரை உள்ளிட்ட படைப்பாற்றல் போட்டிகள் நடத்தப்பட்டன. அமைச்சர் செஞ்சி மஸ்தான் இணைய வழியில் இதனைத் தொடங்கி வைத்திருந்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை நந்தனம் ymca அரங்கில் நடைபெறும் புத்தக காட்சியின் சிற்றரங்கில் நேற்று (பிப். 24) அன்று மாலை கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், நக்கீரன் பொறுப்பாசிரியரும், இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினருமான கோவி. லெனின், கவிஞர் ஜெயபாஸ்கரன், எழுத்தாளர்கள் பாமரன், விஜயலட்சுமி, இனியன், நாகப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். 

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், “பல்வேறு காரணங்களுக்காக தமிழர்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கள் வேர்களை விட்டு பிரிந்திருந்தாலும், தமிழ் அவர்களை அனைவரையும் ஒன்றிணைக்கிறது. நம்முடைய உண்மையான நிலம் என்பது நிலப்பரப்பு அல்ல; தமிழ் இலக்கியமும், பண்பாடும்தான் நம் நிலம். தமிழ் இலக்கியம் என்பது இன்று சர்வதேச இலக்கியமாக மாறிவிட்டது. காரணம், தமிழ் இலக்கிய தமிழ்நாட்டில் மட்டுமின்றி, வெவ்வேறு நாடுகளிலிருந்தும் எழுதுகிறார்கள். இன்று தமிழர்கள் போல் உலகில் பரந்துவாழும் சமூகம் என்பது அரிதிலும் அரிது. தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழை வளர்க்கிறார்கள். தமிழகம் என்பது ஈழத்தமிழர்களுக்கு இரண்டாம் தாயகம். உங்களை எல்லாம் பாதுகாக்கக் கூடிய, நீட்சியையும் பெரும் மாண்பையும் கொண்டுவரக்கூடிய ஒரு அரசும் முதல்வரும் இங்கு இருக்கிறார். 

 

உங்களின் ஒவ்வொரு தேவையையும், குறைகளையும் நிவர்த்தி செய்ய இங்கு ஒரு குழு இருக்கிறது. அதில், கோவி. லெனின் உள்ளிட்டோர்கள் இருக்கின்றனர். இவர், உங்கள் தேவைகளை எல்லாம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடியவர். தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களின் இலக்கிய பிரிவு ஒன்று உருவாகுவதற்கான மிகப் பெரிய அடித்தளமாகத் தான் இந்த நிகழ்ச்சியை நான் காண்கிறேன்” என்று பேசினார்.