/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/viruha.jpg)
பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தி பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் எஸ்.வி.சேகர் உருவப்படத்தை எரித்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/virutha1.jpg)
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தியாக.இளையராஜா தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டு எஸ்.வி.சேகர் உருவபடத்தை எரித்து, எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பினர்.
Follow Us