Skip to main content

எஸ்.வி.சேகர் உருவபடத்தை  எரித்து விருத்தாசலத்தில் போராட்டம்!      

Published on 23/04/2018 | Edited on 23/04/2018
virutha


                                                                                       
பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தி பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விருத்தாசலத்தில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில்  எஸ்.வி.சேகர் உருவப்படத்தை எரித்து செய்தியாளர்கள் போராட்டத்தில்  ஈடுப்பட்டனர்.     


   

virutha1


தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தியாக.இளையராஜா தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் ஏராளமான  செய்தியாளர்கள் கலந்து கொண்டு எஸ்.வி.சேகர் உருவபடத்தை எரித்து, எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“வருத்தம் போதாது, மன்னிப்பு கேட்க வேண்டும்” - எஸ்.வி சேகர்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

s Ve Shekher about ameer gnanavel raja issue

 

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து கரு. பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

இப்படி தொடர்ந்து திரைப் பிரபலங்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசி வந்த நிலையில், ஞானவேல் ராஜா மௌனம் காத்து வந்தார். ஒருவழியாக மௌனம் கலைத்த அவர், வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எஸ்.வி சேகர், எமகாதகன் பட இசை வெளியீட்டு விழாவில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். அவர் பேசியதாவது,  “எனக்கு சினிமாவில் ரொம்ப பிடிச்ச நபர் அமீர். ஏனென்றால் அவருடைய சொந்த பெயரை, அதாவது முஸ்லீம் என்றால் அதை மறைக்காமல் வெளிப்படையாக சொல்லகூடிய தைரியம் மிகுந்த நபர். 

 

சினிமாவிற்கு சாதி, மதம், மொழி இப்படி எதுவுமே இல்லை. அப்படிப்பட்ட சினிமாவில் சமீபத்தில் இப்படிப்பட்ட சர்ச்சை ஏற்பட்டிருக்க கூடாது. ஒரு தயாரிப்பாளர் கிட்ட எவ்ளோ வேண்டுமானாலும் பணம் இருக்கலாம். ஆனால் அதை ஒரு இயக்குநர் தான் ஸ்கீரீனுக்கு கொண்டு வருகிறார். ஒரு படம் ஜெயித்த பிறகு, 10 வருஷம் கழித்து தப்பா பேசுவது சரியான விஷயம் கிடையாது. ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு தான் கேட்க வேண்டும். வருத்தம் தெரிவித்தால் அவர் யாரை சொல்கிறாரோ அவருக்கு தான் வருத்தமா இருக்கும். 

 

நமக்கு பிடிச்சத ஒருவன் செஞ்சா அவன ஆகா ஓகோ-னு புகழ்ந்து பேசனும், பிடிக்காதத ஒருவன் செஞ்சிட்டா என்ன வேணா பொதுவெளியில் பேசலாம் என்பது தவறான ஒரு விஷயம். ஞானவேல் வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாமல், அவர் பேட்டி கொடுத்த வீடியோவை டெலிட் செய்ய சொல்ல வேண்டும். ஒருவரை குறை சொல்வதற்கு முன்னாடி நாம சரியாக இருக்கோமா என்பதை பார்க்க வேண்டும். அப்படி பார்க்காத வரைக்கும் எதுவுமே சரியா வராது. கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் வெறுப்பு இருக்க கூடாது என்பது என்னுடைய பாலிசி” என்றார். 

 

 

 

 

Next Story

சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் எடுத்த புகைப்படங்கள் வெளியீடு

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

Chandrayaan 3 release of images taken by the spacecraft lander

 

இந்தியா சார்பில் நிலவை ஆராய சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றுள்ளது.

 

இஸ்ரோவின் தற்போதைய திட்டப்படி ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருக்கிறது. சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரடியாக நேரலையில் பார்ப்பதற்காக 23 ஆம் தேதி மாலை 5 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சி நேரலை செய்யப்படுகிறது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கும் காட்சிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நிலவின் தென் பகுதியில் சந்திராயன் - 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்க உள்ளது. இதற்கான உகந்த இடத்தை தேர்வு செய்வதற்கான இடத்தை லேண்டர் புகைப்படம் எடுத்து வருகிறது. அவ்வாறு கடந்த 19 ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.