ADVERTISEMENT

’ரஜினி வருவதை கே.எஸ்.அழகிரி விரும்பாவிட்டாலும் மு.க.அழகிரி விரும்புவார்’ - எஸ்.வி.சேகர்

02:57 PM Jul 23, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


நாடக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் எஸ்.வி. சேகர் பொள்ளாச்சி சென்றார். அங்கே அவரை செய்தியாளர்கள் சந்தித்து புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

அதற்கு சேகர், ‘’ புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யாவின் கருத்தை எதிர்க்கிறேன். தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை கொண்டுவர சூர்யா வலியுறுத்தி இருக்கவேண்டும். மாற்றத்துக்கு ஏற்ற கல்வியை படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

தகுதியை தாண்டிய வேலை வாய்ப்பு கொடுக்கப்படுவதாலேயே தமிழ்நாடு கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சிகளால் தான் தமிழ்நாட்டின் கல்வி தரமே சீரழிந்துவிட்டது’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’ ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை முடித்து விட்டார். விரைவில் அரசியலுக்கு வருவார். இதனை கே.எஸ்.அழகிரி விரும்பவில்லை என்றாலும் மு.க. அழகிரி விரும்புவார்’’என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT