
ராமநாதபுரம் பரமக்குடி அருகே மஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபகரன். தற்போது 29 வயதாகும் பிரபாகரனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் மாலா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. கடந்த வருடம் பிரபாகரன் மலேசியாவிற்கு வேலைக்காகச் சென்ற நிலையில் கடந்த வருடம் 22ம் தேதி மாலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவத்திற்காக குடும்ப உறுப்பினர்கள் போகலூர் சத்திரக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர்.
அங்கு மாலாவிற்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பின் ஒரு வாரகாலத்திற்குள் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவரை குடும்ப உறுப்பினர்கள் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரசவத்திற்குப் பின் சில நாட்களில் மாலாவிற்கு காப்பர்-டி பொருத்தியதும் அது கருப்பை குழாயுடன் சேர்த்து தையல் போடப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. மேலும் மாலாவால் இனி கருத்தரிக்க முடியாது எனவும் தனியார் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது குறித்து கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மனு ஒன்றையும் கொடுத்துள்ளார் மாலா.