Advertisment

நடத்தையில் சந்தேகம்...  மனைவியை கொன்றுவிட்டு கணவர் சரண்!

Suspicious teacher in behavior Kill his wife and surrender!

புதுச்சேரி முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயன்(58) அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சாந்தி (52) தனியார் பள்ளி ஆசிரியர். இந்த ஆசிரியர் தம்பதியினருக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாந்தியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் விஜயன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவ்வாறு வழக்கம் போல் இன்றும் (06.09.2020) கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த விஜயன், சாந்தியின் கை கால்களை கட்டிவீட்டில் இருந்த கத்தியால் சாந்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். கொலை செய்த பின் விஜயன் தாம் கொலைக்கு பயன்படுத்தபடுத்திய கத்தியுடன் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் விஜயன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற முதலியார்பேட்டை போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் விஜயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கணவனே மனைவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

murder school pondychery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe