Advertisment

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது- ஜி.கே.வாசன் பேட்டி

va

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரத் தலைவர் சிவக்குமார் இல்ல காதணி விழாவிற்கு கீரமங்கலம் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனுக்கு குதிரைகளின் ஆட்டத்துடன் திறந்த ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர். மதிய உணவுக்காக மாவட்டத் தலைவர் மோகன்ராசு வீட்டிற்கு சென்றவரிடம் நக்கீரன் கேள்விகளும் ஜி.கே.வாசன் பதிலும்.

Advertisment

நக்கீரன்.. 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து?

Advertisment

ஜி.கே.வாசன்.. 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது ஏற்புடையதாக உள்ளது. ஆனாலும் இதனால் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவார்கள் என்றால் அதை தமிழக அரசு சரி செய்ய வேண்டிய இடத்தில் உள்ளது. யாருக்கும் பாதிப்பு வராத வண்ணம் சரி செய்ய வேண்டும்.

நக்கீரன்.. உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் கெடு விதித்துள்ளதே?

ஜி.கே.வாசன்.. உள்ளாட்சி தேர்தலை சரியான நேரத்தில் நடத்தவில்லை என்று தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும் உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டு கெடு விதித்து சரியான பாடம் புகட்டி உள்ளது. இது தமிழக அரசுக்கு அவமானமாக கருதுகிறேன். உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தி அதில் உள்ள குறைபாடுகளை நீக்கி யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் அந்த தேர்தலை தமிழக அரசு நடத்த வேண்டும். அதை நீதிமன்றங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நக்கீரன்.. ஹைட்ரோ கார்ப்பன், நியூட்ரினோ திட்டங்களுக்கு ஆய்வு செய்ய சரியான இடம் தமிழகம் என்று மீண்டும் மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறதே?

ஜி.கே.வாசன்.. மக்களின் எண்ணங்களைத் தான் ஜனநாயக அரசு செயல்படுத்த வேண்டும். மக்களின் அனுமதி இன்றி அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களை கட்டாயப்படுத்தும் தவறான முறையற்ற வழிகயை அரசுகள் செய்யக் கூடாது. ஹைட்ரோ கார்ப்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை மீண்டும் தமிழகத்திற்குள் திணிக்க மத்திய அரசு திட்டமிட்டு அனுமதி அளித்துள்ளது. மக்களின் எண்ணங்களை முழுமையாக கேட்ட பிறகு அவர்களின் 100 சதவீதம் சம்மதம் பெற்ற பிறகு அவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்ட பிறகே செயல்படுத்த திட்டமிட வேண்டும். மக்களுக்கு எதிரான திட்டங்கள் வந்தால் நிறைவேற்ற முடியாது தோல்வியடையும் என்பதற்கு நெடுவாசல் மக்களின் போராட்டமே சான்றாக உள்ளது. கண்மூடித்தனமாக திட்டங்களை தினிக்க நினைத்தால் அந்த திட்டம் நடைபெறாது

நக்கீரன்.. சொத்து வரி உயர்வு?

ஜி.கே.வாசன்.. சொத்து வரியை 50 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று த.மா.கா முதலில் சொன்னது. ஆனால் மக்கள் கருத்தை கேட்ட பிறகு சொல்கிறோம் முழுமையாக ரத்து செய்துவிட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தி உள்ளாட்சி அமைப்புகளின் ஆலோசனைப்படி வரிவிதிப்பை செய்ய வேண்டும்.

நக்கீரன்.. சிலை கடத்தல், கோயில்களில் அறநிலையத்துறை முறைகேடுகள் நடந்துள்ள நிலையில் அதன் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி இருக்கிறதே தமிழக அரசு?

ஜி.கே.வாசன்.. அறநிலையத்துறையின் பல்வேறு சம்பவங்கள், குற்றங்கள், தவறுகள், முறைகேடுகள் பற்றி தினந்தோறும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. சாதாரண மக்களிடம் சந்தேகம் வலுத்துக் கொண்டிருக்கிறது. தமிழக விசாரனை குழு தனது விசாரனையை முழுமை பெறாமலேயே இவ்வளவு தவறுகள் வெளிவந்து கொண்டிருக்கும் போது.. ஏன் என்ன அவசரம் கொள்கை முடிவெடுத்து சி.பி.ஐ. க்கு அனுப்ப வேண்டும் என்ற கேள்விக்குறி சாதாரண மக்களிடம் எழுந்துள்ளது. இது முக்கியமான பிரச்சனையாக பூகம்பமாக எழுந்திருக்கிறது. மக்களுக்கு சந்தேகம் இருந்தால் அதை தீர்க்க வேண்டியது அரசின் கடமை. அரசு துறை மீது எழும் சந்தேகம் நிவர்த்தி செய்யப்படவில்லை என்றால் அந்த அரசாங்கத்தின் மீது தான் சந்தேகம் எழும். ஆள்வோர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் சந்தேகம் எழும். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லை என்றால் மக்கள் அவர்களை கூர்ந்து கவணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நம் நாட்டில் தெய்வ பக்தி உள்ளவர்கள் அதிகம் உள்ளார்கள் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

நக்கீரன்.. கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் வரவில்லை. குடிமராமத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறதே?

தண்ணீர் தாராளமாக திறந்துவிடப்பட்ட நிலையில் அந்த தண்ணீர் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆலங்குடி, அறந்தாங்கி போன்ற கடைமடைப் பகுதிக்கு கிடைக்கவில்லை குளம், குட்டைகள் நிரம்பவில்லை ஆடுமாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லை என்னும் போது குடிமராமத்து பணிகள் முறையாக நடக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு. அரசு எவ்வளவு மெத்தனப் போக்குடன் நடந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. பொதுப்பணித்துறையும் அரசும் குடிமராமத்து பணியை சரிவர செய்யவில்லை என்பது தெளிவாகிறது. தண்ணீர் வந்தாலும் வராவிட்டாலும் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவறியதால் இன்று தண்ணீர் வந்தும் பயனில்லாமல் போய்விட்டது. மேலும் திருச்சி மாவட்டத்தில் புல்லம்பாடி கட்டளைக்கால்வாயை திறக்க வேண்டும் என்றார்.

gk vasan interview
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe