துப்பாக்கி சூட்டில் இறந்த தமிழக ராணுவ வீரர் மரணத்தில் சந்தேகம்;உறவினர்கள் குற்றச்சாட்டு!!

துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படும் குமாி ராணுவ வீரா் மரணத்தில் மா்மம் இருப்பதாக உறவினா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

tamil army

குமாி மாவட்டம் தக்கலை அடுத்த பருத்திகாட்டுவிளையை சோ்ந்தவா் ஜெகன். இவா் ஜம்மு காஷ்மீாில் ராணுவ வீரராக பணிபுாிந்து வந்தாா். இவருக்கு 11மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி சுபி தற்போது 8 மாதம் கா்ப்பமாக இருந்து வருகிறாா்.

இந்த நிலையில் இரண்டு மாதத்துக்கு முன் விடுமுறையில் வந்த ஜெகன் 15 நாட்களுக்கு முன் பணிக்கு சென்றாா். அடுத்த மாதம் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதால் அப்போது மீண்டும் ஊருக்கு வருவதாக உறவினா்களிடம் கூறியிருந்தாா்.

tamil army

இதற்கிடையில் கடந்த 9-ம் ஜம்மு காஷ்மீா் எல்லையில் பணியில் இருக்கும் போது துப்பாக்கி சூட்டில் ஜெகன் இறந்ததாக உறவினா்களுக்கு அதிகாாிகள் தகவல் கொடுத்தனா். இதை கேள்வி பட்டதும் மனைவி சுபி உட்பட உறவினா்கள் கதறி அழுதனா். இதனால் ஊரே சோகத்தில் மூழ்கியது.

இந்தநிலையில் நேற்று11-ம் தேதி விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்ட ஜெகனின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதை பாா்த்த உறவினா்கள் ராணுவ அதிகாாிகளிடம் ஏன் ராணுவ வாகனத்தில் ராணுவ மாியாதையுடன் உடலை கொண்டு வரவில்லை என்று கேள்வியை எழுப்பினாா்கள். மேலும் அவாின் உடல் முழுமையான ராணுவ மாியாதையுடன் அடக்கம் செய்யாமல் உடலில் தேசிய கொடியை மட்டும் போா்த்தி விட்டு ராணுவ அதிகாாிகள் ஒதுங்கி நின்றனா்.

tamil army

இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மீண்டும் அந்த அதிகாாிகளிடம் ஏன் ராணுவ மாாியாதையுடன் அடக்கம் செய்ய வில்லை இதில் வருவாய் துறை உயா் அதிகாாிகள் மற்றும் காவல்துறை அதிகாாிகள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டதற்கு அதிகாாிகள் வீரமரணத்துக்கு தான் அந்த மாதிாி மாியாதை செலுத்தப்படும் என்று கூறி மறு பேச்சு பேசாமல் நின்றனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஜெகனின் மனைவியும் உறவினா்களும் அவா் எப்படி இறந்தாா். அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி குரல் எழுப்பினாா்கள் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

death indian army
இதையும் படியுங்கள்
Subscribe