Sister killing

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சகோதரியை கம்பியால் தாக்கி கொலை செய்து தம்பி தலைமறைவானார்.

தேனி மாவட்டம், கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், மரகதம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும், செல்வக்குமார் என்ற மகனும் உள்ளனர். செல்வக்குமார் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். விடுமுறையின்போது ஊருக்கு வருவார். ஜெயந்தி மாலாவுக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.

கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார் மரகதம். கணவரை பிரிந்து இங்கு வந்து தங்கியிருக்கும் மரகதத்தின் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர் செல்வக்குமாருக்கு தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து 10 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார் செல்வக்குமார். அப்போது வீட்டில் மரகதத்திடம், செல்வக்குமார் மற்றும் அவரது பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாத்தின்போது எரிச்சலடைந்த செல்வக்குமாரும், அவரது பெற்றோரும் அருகில் இருந்த கத்தியை எடுத்து மரகதத்தை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மரகதம் உயிரிழந்தார்.

சம்பவம் நடந்தவுடன் செல்வக்கமார் அந்த இடத்தில் இருந்து தப்பினார். கொலை சம்பவம் குறித்து அறிந்த வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையா மற்றும் பேச்சியம்மாளை கைது செய்தனர். தப்பி ஓடிய செல்வக்குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment