கோவை மனோகரனுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2010 ல் அக்கா முஸ்கான், அவரது தம்பி ரித்திக் கடத்தி கொலைசெய்யப்பட்டனர். இதில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளி மனோகரனின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது.

Advertisment

Suspension of conviction

கடந்த 2010 ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய இந்த பாலியல் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மோகன்ராஜ் என்றகுற்றவாளி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றமும் இந்த தண்டனைய உறுதி செய்திருந்தது. இந்நிலையில்கோவையில் குழந்தைகளை கடத்தி கொலை செய்த மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவுஎன உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. 10 வயது சிறுமி 7 சிறுவனை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதற்காகதூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால் டிசம்பர் 2 ல் தூக்கிலிட கோவை நீதிமன்றம் முடிவு செய்திருந்தது.

Advertisment

இந்நிலையில் மனோகரன் தாக்கல் செய்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.