kovai

Advertisment

கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களை திரட்டிபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

கோவை அரசு கலைக்கல்லூரியில் சுதந்திரபோராட்ட வீரர் பகத்சிங் பிறந்தநாளை மாணவர்களை திரட்டி கொண்டாடியுள்ளார் எம்.ஏவரலாறு பயின்று வந்த மாணவி மாலதி. அப்போது அந்த கூட்டத்தில் கல்லூரியின் நிறை, குறைகள் பற்றி மாணவி பேசியதாக கூறப்பட்ட நிலையில் தற்போதுஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த இடைநீக்கம் குறித்து கல்லுரி நிர்வாகம் தரப்பில் சம்பந்தப்பட்ட மாணவி அடிக்கடி தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்பார். இதனால் வகுப்புகள் நடக்க இடையூறு ஏற்படுகிறது. பகத்சிங் பிறந்த நாளை கொண்டாட அனுமதித்தால் பிறகு எல்லா தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்பார் எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல் மாணவிதரப்பில், வரலாறு படிக்கும் நாங்கள் சுந்திரப்போராட்ட வீரர்களின் பிறந்தநாளை கொண்டாடியது தவறில்லையே என சொல்லப்பட்டுள்ளது.