Advertisment

சந்தேகத்தால் மனைவி, மகன் கொலை... 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்க வைத்த சிக்கன் பக்கோடா!

Suspected wife, son case... Chicken  trapped after 8 years!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தாய் மற்றும் மகனை வெட்டி கொலை செய்த நபரை 8 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் குணசுந்தரி. கணவனை இழந்த இவருக்கு ஏழு வயதில் மகேஷ் என்ற மகன் இருந்தான். ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை குணசுந்தரி கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.அதனைத்தொடர்ந்து அடிக்கடி குணசுந்தரி மீது சந்தேகப்பட்ட ராஜு தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறில் குணசுந்தரியையும் மற்றும் அவரது மகனையும் வெட்டி கொலைசெய்து விட்டு தலைமறைவானார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து ராஜுவை தேடி வந்தனர். ஆந்திரா மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள ஒரு சிக்கன் பக்கோடா கடைக்கு ராஜு அடிக்கடி வருவதாக தகவல் தெரிந்ததையடுத்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு கொலைக் குற்றவாளியான ராஜூவை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

incident police Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe