Advertisment

சகோதரர் மரணத்தில் சந்தேகமடைந்த தம்பி போலீசில் புகார்!

Suspected brother lodges complaint with police

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது நாவலூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகாசி. இவரது மகன் முருகன் வயது 38 இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு 15வது திருமண நாள் இதை கொண்டாடும் அன்று மனைவி பிள்ளைகளுடன் சந்தோஷமா கோயிலுக்கு சென்றுவிட்டு வந்தனர். அன்று அவரது வீட்டில் தடபுடலாக விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு. அக்கம்பக்கத்து உறவினர் நண்பர்களுடன் சந்தோஷத்துடன் விருந்து சாப்பிட்டுள்ளனர். அன்று இரவு தன் திருமண நாள் சந்தோஷத்தை முன்னிட்டு முருகன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தனது வீட்டின் மொட்டை மாடியில் சென்று இரவு படுத்து தூங்கியுள்ளார்.

Advertisment

இரவு 11 மணியளவில் முருகன் மனைவி காவேரி மொட்டை மாடிக்குச் சென்று கணவரை எழுப்பி வீட்டுக்குள் வந்து படுக்குமாறு அழைத்துள்ளார். ஆனால் முருகன் எழுந்திருக்கவில்லை பலமுறை அழைத்தும் கணவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த காவேரி தனது மகன் பிரதீப்பை அழைத்து கணவரை எழுப்பு சொல்லியுள்ளார். பிரதீப்பும் தன் தந்தையை பலமுறை அழைத்தும் உடலில் கையை வைத்து அசைத்தும் எழுப்பி பார்த்தும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காவேரி அவரது மகன் பிரதீப் இருவரும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதே ஊரில் அவரது தம்பி சுப்பிரமணியம் மற்றும் உறவினர்கள் முருகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment

இதையடுத்து முருகனின் தம்பி சுப்பிரமணியன் ஆவினங்குடி காவல்நிலையத்தில் தனது அண்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆவினன்குடி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் முருகன் மரணம் எப்படி ஏற்பட்டது, அவர் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident thittakkudi Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe